கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 81,12,611 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ். இன்று உலகளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளையும் பாதிப்பில் ஆட்டங்காணச் செய்தது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரமும் சரிய, வெளிநாடுகளில் வேலை பார்த்து வருபவர் களின் நிலை கவலைக்கிடம் ஆகிவிட்டது.
கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து உலகத்தின் ஒரு மூலையில் கூட பாதிப்பு இல்லை என்ற பட்சத்தில்தான் அனைத்தும் பழையபடி சரியாகும் என்று இருக்கும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் கூடிக் கொண்டேதான் செல்கிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81,12,611ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,39,085 ஆக இருக்க, 42,13,601 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 21,82,950 இறப்பு எண்ணிக்கை 1,18,283 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,59,866 ஆகவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி பாதிப்பு அதிகமாகிக்கொண்டே இருந்தால் பழைய நிலைக்கு திரும்பி வாழ்க்கையை மேற்கொள்வது எப்போது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.