கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் மாத உதவித் தொகையாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இதன்காரணமாக குடும்பங்களையும், பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக மத்திய அரசு அவருக்கு 5,000 உதவி தொகை மாதம்தோறும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
பெற்றோர்களை இழந்து வாழும் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்றும், அது அரசு கவனித்துக்கொள்ளும் எனவும், அவர்களுக்கு இலவச கல்வி, ரேஷன் பொருட்கள், சுய தொழில் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தரும் எனவும் சிவராஜ் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.