கொரோனாவுக்காக கண்டுபிடித்த மருந்தை பரிசோதிக்க போதிய அளவில் ஏசிஇ-2 வகை எலிகள் இல்லாததால் அதனை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தாக்கத்தின் காரணமாக பெங்களூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சினிமா தியேட்டர், கிரிக்கெட் மைதானம் ஊர் திருவிழா என மக்கள் கூடும் பொது இடங்களில் தடை விதிக்கப்பட்டு அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
மேலும் அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரிய பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களும், அதன் மருத்துவர்களும் கொரோனோவிற்கான மருந்தை கண்டுபிடிக்க மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் இதற்கான முயற்சி 70 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில்,
அதனை சோதனை செய்ய ace2 என்ற வகை எலிகள் தேவைப்படுகிறது. வழக்கமாக மருத்துவர்கள் ஒரு புதிய மருந்தை கண்டு பிடிக்கிறார்கள் என்றால் அதனை இந்த எலியின் மூலம் சோதனை செய்த பின்பே மனிதர்களுக்கு வழங்குவர்.
இதன் உடலில் இயங்கும் அனைத்து உடல் உறுப்புகளும் மனித உடல் உறுப்புகளுடன் ஒத்துப்போகும் என்பதால் இதில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. தற்போது இதனுடைய எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருப்பதால் இந்த சோதனை ஓட்டத்தை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.
ஆகையால் இதனை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் முயல், பன்றி உள்ளிட்ட விலங்குகளை சோதனையில் ஈடுபடுத்தலாமா? என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.