Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த கொரோனா மாதிரிகள்… சேலத்தில் அதிர்ச்சி …!!

சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பல்வேறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதித்தவர்கள் இருமல், சளி இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய சளி பரிசோதனை செய்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முகாம்கள் நடத்தப்படுகின்றன. சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என சுகாதாரத் துறை சார்ந்த ஊழியர்கள் இந்த சளி மாதிரி பரிசோதனை எடுக்கிறார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ஆத்தூரை அடுத்த தலைவாசல் பகுதியில் நடைபெற்றது.

பரிசோதனையின் மாதிரிகள் அந்த பகுதியில் இருந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் போது ஆத்தூரை அடுத்த இருக்கக்கூடிய கொத்தாம்பாடி பகுதியில் சாலையில் சிதறி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த தலைவாசல் பகுதியில் எடுக்கப்பட்ட சளி மாதிரிகள் பரிசோதனை செய்வதற்க்காக் சேலம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு வருகின்றபோது ஊழியர்களின் அலட்சியப் போக்கால் தான் இந்த நிலையில் ஏற்பட்டுள்ளதாக  முதற்கட்ட விசாரணை வெளியாகி இருக்கின்றது.

Categories

Tech |