கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் பெண்கள் நடன நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியில் நான்காவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் கொரோனா அறிகுறிகளுடன் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களை மாநில அரசு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா முகாம்களில் தங்கவைத்து, தனிமைப்படுத்தியுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.
இந்த நிலையில் பீகாரில் உள்ள சம்ஸ்திபூர் மாவட்டத்தில் காராகா கிராமத்தில் மாநில அரசின் கீழ் முகாம் அமைக்கப்பட்டு வைரஸ் தொற்று அறிகுறிகள் இருபவர்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். முகாமில் தனிமையில் இருக்கும் அவர்களின் பொழுதுபோக்கிற்காக ஒரு சிலர், பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சியை நடத்தினர். இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அம்மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கொரோனா முகாம்களில் பொழுது போக்கிற்காக தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளை முகாமில் ஏற்க இயலாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
#कोरोना का डर दूर करने के लिए क्वारंटीन सेंटर में इंतज़ाम #बिहार की तरह होना चाहिए… 😆😆
वाह हो @NitishKumar जी… गजब्बे महफ़िल सजाई दिए।
(समस्तीपुर के विभूतिपुर प्रखंड का देसरी कर्रख क्वारंटीन सेंटर)#coronavirus @yadavtejashwi pic.twitter.com/YgZSRrh9ID
— प्रदीप तिवारी 🇮🇳 (@iamtpradeep) May 19, 2020