Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் தள்ளி நிற்கணும்… பொதுமக்களின் அலட்சியம்… அதிகாரிகளின் அறிவுரை…!!

ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி வாங்குவதற்காக சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று  அதிகமாக பரவி வரும் நிலையில் ரேஷன் கடையில் அரசு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வரும் சமயத்தில் ஜான்சன் பேட்டை ரேஷன் கடையில் நிவாரண நிதியை வாங்குவதற்காக 300 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்காமல் கடைக்கு முன் குவிந்துள்ளனர். இதனால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டு கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நிற்பதற்காக கடையின் முன் வட்டம் வரைந்துள்ளனர். அதன்பின் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா நிவாரண நிதியை வாங்கி சென்றுள்ளனர். இதுகுறித்து  மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், முகக்கவசம் கட்டாயம் அணிந்து தான் வெளியே வர  வேண்டும் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |