Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” என் ஏரியால கிடையாது….. கெத்தாக வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா….!!

கைலாச தீவில் கொரோனா பாதிப்பு இல்லை என நித்தியானந்தா வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது..

சீனாவில் கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன. அந்த வகையில்,

நித்யானந்தா சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் குடி பெயர்ந்துள்ள கைலாச தீவில் கொரோனா என்பதே இல்லை என்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் காய்ச்சி அளித்துள்ளார். ஏற்கனவே அவரது சிஷ்யர்கள் சிலர் கைலாச தீவில் கொரோனா இல்லை என்று டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |