Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா  நிவாரண பணிகளுக்கு…. ரூ11 கோடி நிதி திரட்டிவிட்டோம்…. விராட் கோலி ட்வீட் …!!!

கொரோனா  நிவாரண பணிகளுக்கு விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து ரூபாய் 11 கோடி நிதி திரட்டி உள்ளனர் .

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின்  இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவின் கொரோனா  பாதிப்பிற்கு பல்வேறு வெளிநாடுகளும், பிரபலங்களும்  கொரோனா நிவாரண பணிகளுக்காக  நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா இருவரும்,’கெட்டோ’ அமைப்புடன் இணைந்து , கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன.இந்த  அமைப்பின் மூலமாக ரூபாய் 7 கோடி நிதி திரட்டி ,கொரோனா நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக,தெரிவித்தனர் .

அத்துடன் இந்த தம்பதி தங்களின் பங்களிப்பாக  ரூபாய் 2 கோடியை வழங்கியிருந்தது. அதோடு கேப்டன் விராட் கோலி ,அனைவரும் தங்களால் முடிந்த நிதி உதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிதி அமைப்பின் மூலம், 7 கோடி என்ற இலக்குடன், தொடங்கப்பட்ட இவர்களின் முயற்சிக்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  தற்போது ரூபாய் 11 கோடியே 39 லட்சத்து 11,820 வசூலாகி இருப்பதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இதுபற்றி அவர் ட்விட்டரில் ,’எங்களுடைய இந்த முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது , நாங்கள் இருமுறை எங்களுடைய இலக்கை தாண்டி விட்டதாக கூறினார். நிதி உதவி அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் .இந்த இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் ஒன்றிணைத்து சமாளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |