கொரோனா நிவாரண பணிகளுக்கு விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து ரூபாய் 11 கோடி நிதி திரட்டி உள்ளனர் .
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பிற்கு பல்வேறு வெளிநாடுகளும், பிரபலங்களும் கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா இருவரும் நிதி அமைப்பின் மூலம் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன.
இந்த நிதி அமைப்பிற்கு ,இந்த தம்பதி ரூபாய் 2 கோடியை வழங்கியிருந்தது. அதோடு கேப்டன் விராட் கோலி ,அனைவரும் தங்களால் முடிந்த நிதி உதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிதி அமைப்பின் மூலம், ஏழு கோடி என்ற இலக்குடன், தொடங்கப்பட்ட இவர்களின் முயற்சிக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் 2 நாட்கள், மீதமுள்ள நிலையில் தற்போது ரூபாய் 11 கோடி கிடைத்துள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார் .இதில் குறிப்பாக எம் பி எல் விளையாட்டு பவுண்டேஷன் சார்பில் ரூபாய் 5 கோடி வழங்கப்பட்டுள்ளது .
Thank you MPL Sports Foundation for your generous contribution of 5 crore in our fight against Covid-19. With your help we have now increased our target to 11 crore. Anushka & I are deeply grateful for your unconditional support. 🙏@PlayMPL#InThisTogether #ActNow
— Virat Kohli (@imVkohli) May 12, 2021