உலகிலேயே அண்டார்டிகா கண்டம் தான் கொரோனா சுவடே இல்லாமல் தப்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகமே கொரோனா பாதிப்பால் தவித்து வரும் நிலையில் அண்டார்டிகா கண்டம் கொரோனா சுவடே தெரியாமல் உள்ளது. உலகம் முழுவதும் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் 3 கோடியை நெருங்குகிறது. உலகின் மூலை முடுக்குகளில் உள்ள சிறுசிறு நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அண்டார்டிகாவின் இதன் தாக்கம் இல்லாத கண்டமாக உள்ளது.
அண்டார்டிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எத்தகைய சிக்கலும் இன்றி தங்களது ஆராய்ச்சிகளில் சுதந்திரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்ட கடும் கட்டுப்பாடுகளால் இது சாத்தியமானதாக அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.