Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளி இரவு முழுவதும் அலைக்கழிப்பு ….!!

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நள்ளிரவில் கொரோனா நோயாளி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிருஷ்ணா நகர் சொக்கமுத்து விதியைச் சேர்ந்த 57 வயது பெண்மணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு நோய் குணம் அடைந்தது என்று சொல்லி மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறல் வந்துள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வந்தார்.

ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்காமல் 4 மணி நேரத்திற்கும் மேலாக நள்ளிரவில் காக்க வைத்துள்ளனர். இதற்கிடையே அவர் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதை தொடர்ந்து அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இரவு முழுவதும் அலைக்கழிக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Categories

Tech |