Categories
உலக செய்திகள்

‘இந்த சிகிச்சை தேவையில்லை’…. கொரோனா நோயாளிகளுக்கு…. உலக சுகாதார அமைப்பின் அறிக்கை….!!

கொரோனா நோயளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் தற்பொழுது ஒமைக்ரான் தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த நோயாளிகளின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவை தற்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா  சிகிச்சை முறை நரம்பு வழியாக செலுத்தப்படுகிறது. இதனை தொடக்க காலத்தில் உலக சுகாதார அமைப்பும் பரிந்துரை செய்தது.

ஆனால் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட தகவலின் படியும் அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சிகளின் முடிவின் அடிப்படையிலும் இந்த சிகிச்சை தேவையற்றது என்பது தெரிகிறது. மேலும் இந்த முறையினால் அதிக அளவு செலவு மற்றும் நேரம் ஆகின்றது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |