Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் சொன்ன மாதிரியே…எங்கும் இல்லாத கூடுதல் வசதி… திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்…!!

அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகளை திறந்துவைத்தார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்காக 500 ஆக்சிஜன் படுக்கை இருக்கிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அங்கு சென்று பார்வையிட்ட போது கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கையை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து ஆக்சிஜன் படுக்கை தயாரிக்கும் பணி மும்முரமாக தொடங்கி விரைவில் முடிவடைந்தது. பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி இரும்பாலை அரசு மருத்துவமனையில் அங்கு புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதிகளை திறந்து வைத்துள்ளார். இந்த விழாவில் மேலும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சரான செந்தில் பாலாஜி, பெருமையாக இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் சேலம் இரும்பாலையில் ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கணக்கெடுப்பில் மொத்தம் 12,658 படுக்கை வசதி கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 310 ஆக இருந்து வந்த நிலையில் 10 நபர்களுக்கு தொற்று நீங்கி வீடுகளுக்கு திரும்பி உள்ளதை தெரிவித்தார். இங்கு இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதையும் குறிப்பிட்டு உள்ளார்.

Categories

Tech |