கொரோனா ஊரடங்கை மீறியதால் பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் முக்கியமாக அந்த நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் லாகோசில் என்ற பகுதியில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கும், இறுதி சடங்கு மற்றும் திருமணங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டிலுள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவரான பன்கே அகிண்டெலே தன்னுடைய கணவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் வீட்டிற்கு வரவழைத்து பிரமாண்டமாக கொண்டாடினார்.
இதுமட்டுமல்லாமல் அவர்கள் மது, ஆடல், பாடல் என்று ஆரவாரமாக கொண்டாடிய விருந்து நிகழ்ச்சியை வீடியோவில் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இது பலரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அவர் மீது போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் 260 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.20 ஆயிரம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது.
இது குறித்து பன்கே அகிண்டேலே கூறியதாவது; இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் என்னுடைய வீட்டில் பல நாட்களாக தங்கி இருக்கிறார்கள் என்றும், அவர்கள் யாரும் வெளியே இருந்து வரவில்லை என்றும் அவர் செய்த செயலை நியப்படுத்தினார்.