Categories
உலக செய்திகள்

கொரோனா தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் விரிவான விசாரணை… வெளியான தகவல்..!!

சீனாவின் உகான் நகரிலிருந்து முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா நோய்தொற்று மக்களை அச்சுறுத்திக் கொண்டு வருகின்றது. இன்றளவும் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக கொரோனா வைரஸ்  திகழ்கின்றது. இதுகுறித்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 பேர் உள்ளடக்கிய விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த வகை வைரஸ் சீனாவின் யுவான் நகரில்தான் முதன்முதலாக தோன்றியது என்று தகவல் வெளிவந்தது. உகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்த வைரஸ் பரவி உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தன. இந்த கொரோன வைரஸ் அமெரிக்காவின் ஜான்ஸ்  ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு மையத்தின்  தகவல்படி, உலகின் 200 நாடுகளில் 13,31,33,903 பேரை கொரோனா தோற்று தாக்கியுள்ளது. பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 28,87,909 பேரை இந்த வைரஸ் கொன்றுள்ளது.

உலக சுகாதார நிபுணர்கள் உகான்  நகருக்கு சென்று இந்த வைரஸின் தோற்றத்தை விசாரணை நடத்தினர். அந்த விசாரணை முடிவில் ஆய்வு கூடத்தில் இருந்து இந்த வகை வைரஸ் கசிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று உறுதியளித்து வன விலங்குகளிடம் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து 24 பேர் உள்ளடக்கிய விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து இந்த கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி விரிவான புதிய விசாரணை விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இதில் கிடைக்கக்கூடிய சிறந்த வழிமுறைகளை கொண்டு கொரோனா நோய்த்தொற்றின் தோற்றம் குறித்து முழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறோம்.

இந்தப் பேரழிவு எவ்வாறு தொடங்கியது என்பதை புரிந்து கொள்வதில் எவ்விதமான முயற்சியை விட்டுவிடக்கூடாது என்றும் அதற்கான முயற்சிகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க முடியும் என்றும் பொதுமக்கள் மற்றும் அனைத்து நாடுகளின் நலனுக்காக இதை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் எழுதுவதற்கு வழிகாட்டியாக இருந்த அட்லாண்டிக் கவுன்சில் விஞ்ஞானி ஜெமி மெட்சில் இது பற்றி கூறியுள்ளார். அதாவது எதிர்காலத்தில் இதுபோன்ற மதிப்பாய்வுகள் அமெரிக்க ஆய்வு கூடங்கள் இருக்க வேண்டும் இந்தத் தொற்று நோய் விசாரணைக்கு அவசரமானது. இந்த விரிவான விசாரணையை உடனடியாக தொடங்கி தீவிர விசாரணையில் ஈடுபட வேண்டும் எனவும் இவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |