கொரோனா தொற்று பாதிப்பானது குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக அளவில் ஒரு வாரகாலமாக பரவிய கொரோனா தொற்று பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை காணும்பொழுது கடந்த வாரத்தை விட தற்பொழுது பாதிப்பானது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை உலக அளவில் புதிதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 31,00,000 ஆகும். இதனை அடுத்து 50,000 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இது முந்தை வாரத்தை விட 9% குறைந்துள்ளது.
இருப்பினும் இறப்பு எண்ணிக்கையில் எந்தவொரு வித்தியாசமும் காணப்படவில்லை. குறிப்பாக அமெரிக்காவில் 43%மும் மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 20%மும் வட அமெரிக்கா மற்றும் மேற்குப் பசுபிக் பகுதிகளில் 12%மும் கொரோனா தொற்று பாதிப்பானது குறைந்துள்ளது. அதிலும் கடந்த மாதம் இறுதிவரை மூன்றில் ஒரு பங்கு ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு 19% மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.