Categories
உலக செய்திகள்

கொரோனா பாதுகாப்பு பொருட்களில் ஊழல்…. சமூக விவகாரத்துறை அமைச்சர்…. சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்….!!

ஊழல் வழக்கில் கைதான சமூக விவகாரத்துறை அமைச்சருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தோனேசியாவில் கொரோனா பாதுகாப்பு பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக அப்போது இருந்த  சமூக விவகார அமைச்சரான Juliari Batubara மீது குற்றம் சுமத்தப்பட்டது.  இதனையடுத்து Juliari Batubara அவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும்  ஊழல் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஊழல் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது.

மேலும் அவர் சமூக உதவி பொருட்களை வாங்குவதில் கையூட்டு பெற்றிருப்பதாக கூறியது. இதனை தொடர்ந்து அவருக்கு இந்தோனேசியா தொகையில் ரூபியா அபராதமும், மோசடி செய்யப்பட்ட பணத்தை திருப்பி அளிக்கவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதிலும் அவரின் சிறை தண்டனை முடிந்த பிறகும் நான்கு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பொதுமக்கள் சேவை தொடர்புடைய எந்தவித அரசாங்க பணிகளிலும் செயல்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |