உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது என்று ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஊகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பத்து மாத காலத்தில் உலகில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இது குறித்து ஐநா சபை பொது செயலாளர் அண்டனியோ கட்டரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகம் ஒரு வேதனையான மைல்கல்லை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பெரும் தொட்டுக்கு 10 லட்சம் உயிர்கள் பலியாகி இருப்பதாகவும், இது மனதை நெருடும் எண்ணிக்கையாகும் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். இந்த சவாலை நாம் கடந்து வர முடியும் என்றும் ஆனால் நாம் தவறுகளில் இருந்து கற்று கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். தனிமனித இடைவெளியை அனைவரும் பராமரிக்க வேண்டும், எல்லோரும் முக கவசம் அணிய வேண்டும், அனைவரும் அடிக்கடி கைகளைக் கழுவி சத்தம் காக்க வேண்டும் என்றும் அண்டனியோ கட்டரஸ் வலியுறுத்தி உள்ளார்.