Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பணியாளர்கள் இங்கே தங்கலாம்” இடமளித்த ரோஹித் ஷெட்டி…. நன்றி தெரிவித்த மும்பை பொலீஸ்…!!

கொரோனா பணியாளர்களுக்கு தனக்கு சொந்தமான ஹோட்டல்களை ரோஹித் ஷெட்டி கொடுத்தமைக்கு மும்பை காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் இயக்குநரான ரோஹித் ஷெட்டிக்கு மும்பையில் சொந்தமான ஹோட்டல்கள் உள்ளன. அவற்றை கொரோனா பணியாளர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர்களுக்கும் தங்கிக்கொள்ள ஏற்பாடுகள்  செய்து கொடுத்துள்ளார். கொரோனா பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த ஹோட்டல்களையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரோஹித் ஷெட்டியின் இந்தச் சேவைக்கு மும்பை காவல்துறை நன்றி தெரிவித்து, இது பற்றி அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத் தொடங்கி இப்பொழுது வரை தொடர்ந்து காக்கிச்சட்டையில்  இருக்கும் ஆண்கள், பெண்களுக்குத் தன்னுடைய உதவியை வழங்கி வரும் ரோஹித் ஷெட்டி அவர்களுக்கு எங்கள் நன்றியைத் மனமார தெரிவித்துக் கொள்கிறோம்.

மும்பை வீதிகளில் கொரோனா பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எங்கள் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு ரோஹித் அவரது 11 ஹோட்டல்களை வழங்கியுள்ளார்”. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. ரோஹித் ஷெட்டி “சென்னை எக்ஸ்பிரஸ்”, “தில்வாலே”, “சிங்கம்”, “சிம்பா” போன்ற  படங்களை இயக்கியுள்ள இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள “சூர்யவன்ஷி” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

Categories

Tech |