Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆய்வுக்கூட்டம் – தமிழக தலைமைச் செயலாளர் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் திரு. சண்முகம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 19 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரத்து 24 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பு உள்ள பகுதிகளில் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று இருந்தால் அந்த பகுதியை தடைசெய்து கண்காணிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

Categories

Tech |