Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலால் ,பொதட்டூர்பேட்டை ….வாரச்சந்தை தற்காலிகமாக மூடல்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு தாலுகாவை அடுத்துள்ள ,ஆர்.கே. பேட்டையில் வாரச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இந்த பொதட்டூர்பேட்டை வார சந்தையானது ,வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாகக் கூடும். ஆனால் இந்த சந்தைகளில் பொது மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்டம் கூட்டமாக சந்தைகளில் கலந்து கொண்டனர்.

இதனால் திருத்தணி ஆர்.டி.ஓ அதிகாரியின் உத்தரவின்பேரில் வார சந்தைகள், தெருமுனை மற்றும் காய்கறி சந்தைகள் போன்ற சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலரான முனுசாமி வாரச் சந்தை மைதானத்தில் உள்ள, இருபுறமும் கதவுகளை பூட்டி வாரச்சந்தை மூடப்பட்டுள்ள செய்தியுடன் ,அட்டைகளை கேட் கதவில் தொங்கவிட செய்தனர்.

Categories

Tech |