Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவும் மையமாக மாறிய ‘கும்பமேளா’…! 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று உறுதி …!!!

ஹரித்துவாரில் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும்  30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவார் கும்பமேளா திருவிழாவானது , தற்போது கொரோனா  வைரஸ் பரப்பும் மையமாக மாறியுள்ளது. இந்த கும்பமேளா திருவிழாவிற்கு லட்சக்கணக்கில்  பக்தர்கள் குவிந்துள்ளதால் ,அங்கு கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டன. குறிப்பாக முக்கிய நிகழ்வான நதிகளில் புனித நீராடுதலின்  போது 48 லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் நதிகளில் புனித நீராடி உள்ளனர். இதனால் கும்பமேளாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ,சாதுக்கள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டனர்  . குறிப்பாக கும்பமேளாவில் கலந்து கொண்ட  சாதுக்கள் 30 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் ,சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பமேளா திருவிழாவிற்கு கலந்து கொண்ட ,மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து வந்த ,அகாரா  அமைப்பு தலைவரான கபில்தேவ் உடல் நிலையால் பாதிக்கப்பட்டு,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கும்பமேளாவில் கலந்து கொண்ட வெளிமாநில பக்தர்கள் ,அவர்களின் சொந்த ஊருக்கு படையெடுத்து உள்ளதால் ,மேலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்டில் கோவில் திருவிழாக்கள், மதம்சார்ந்த நிகழ்ச்சிகள் ,அரசியல் நிகழ்ச்சிகள் உட்பட்ட நிகழ்ச்சிகளுக்கு 200 பேருக்கு மேல் மக்கள் பங்கேற்க கூடாது , என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் இந்த கும்பமேளாவிற்கு மட்டும் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன.

Categories

Tech |