வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்களுக்காக புதிதாக கொரோனா பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் போராடி வருகின்ற நிலையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவர்களுக்கு பிரத்தியேகமாக பாஸ்போர்ட் ஒன்று தற்போது அறிமுகமாகியுள்ளது. உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டும், குறைந்து கொண்டும் இருப்பதால் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து இயக்கப்படுவதும், பின்னர் ரத்து செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதனை தொடர்ந்து டென்மார்க் நாட்டின் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு பிரத்யேகமாக கொரோனா பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றது. இதன் மூலமாக வெளிநாடுகளுக்கு பயணம், திருமண நிகழ்சகள் போன்ற பயணங்களுக்கு பயன்படுகிறது.