Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி… பிசிசிஐ மீது பொதுநல வழக்கு…!!

இந்தியாவின் கொரோனா பாதிப்பிற்கு ,இழப்பீடு தொகையை பிசிசிஐ வழங்க வேண்டும், என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின்  2 ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. எனவே  தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் , தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் , மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல்  மாதம் 9ம்  தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வந்தது . ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினர் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ,ஐபில் போட்டிகளை நடத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் .

தற்போது ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள , ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனு தாக்கல் செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே ,ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு, மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் வழங்குவதற்காக பிசிசிஐ இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் ,என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது   நாளை மறுநாள் 6ஆம் தேதி ,விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Categories

Tech |