Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா பாதிப்பிற்கு உதவிய….சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் ….ரூ 30 கோடி நன்கொடை ….!!!

இந்தியாவின் கொரோனா  தொற்று பாதிப்பிற்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நன்கொடை வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின்  இரண்டாம் அலை  கோரத் தாண்டவம் ஆடுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில்  கொரோனா தொற்று  பாதிப்பிற்கு வெளிநாடுகள் , பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றன.

அந்த வகையில் ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் ஒன்றான, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொரோனா தொற்று  பாதிப்பிற்கு, நிதி உதவி வழங்கியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான, சன் தொலைக்காட்சி நெட்வொர்க்  30 கோடி ரூபாய் கொரோனா தொற்று  பாதிப்பிற்கு, நன்கொடையாக வழங்கியுள்ளது. மத்திய , மாநில அரசுகள், என்ஜிஓ போன்றவற்றால் நடைபெறும் கொரோனா  தடுப்பு பணி  நடவடிக்கைகளுக்காக இந்தப் பணம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |