Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…3 மாநிலங்களில் 48% பாதிப்பு..!!

மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 48% பேரைக் கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் 32 மாநிலங்களில் உள்ள 430 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 48% பேர் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த மூன்று மாநிலங்களோடு  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்தால் 78 சதவீத கொரோனா பாதிப்பு. இந்த ஆறு மாநிலங்களில் மட்டும் பதிவாகி உள்ளது.  நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 9.9 சதவீதமாக இருந்த குணமடைந்தோர் வீதம், இந்த வாரம் 17.48 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் நோய் தொற்று இரட்டிப்பாகும் வீதமும் அதிகரித்து வருகிறது. மூன்று, நான்கு தினங்களில் இரட்டிப்பாகி வந்த நோய் தொற்று தற்போது 7.5 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்து நாடுகளில் நோய் தொற்று மீண்டும் அதிகரிக்கும் எனவும் இந்த வைரஸ் மீண்டும் நம்மோடு நீண்ட நாட்கள் பயணிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |