கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இனி முதல் வாய்ப்பாக வெண்டிலேட்டர் பொறுத்தப்படாது என்று மருத்துவர் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று பரவ தொடங்கியதுமே நாட்டில் இருக்கும் வெண்டிலேட்டர் வசதிகள் குறித்துதான் அலசப்பட்டது. அதற்கு கரணம் கொரோனா பாதித்து மூச்சு விடுவதில் சிரமம் ஆவதுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டேயாகும். ஆனால் கொரோனா தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை முறைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் கொரோனா பாதித்து மிகவும் அபாய கட்டத்துடன் குறைந்த ஆக்சிஜன் எடுப்பு திறனுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அது பெரும்பாலும் பலனளிக்காது. இதனையே மருத்துவர்கள் தொடர்ந்து அறிந்து கொண்டனர். அதற்கு மாற்றாக மூச்சு விடுவதில் சிரமத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்சிஜன் சேவையை தற்போது மருத்துவர்கள் தேர்வு செய்துள்ளனர் .
வெண்டிலெட்டர்கள் இல்லாமல் தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை கண்டறியப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனை உறுதி செய்யும் வகையில் மும்பையை சேர்ந்த தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறுகையில் நியூயார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கொரோனா நோயாளிகளில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டவர்களில் 80 சதவீதம் குணமடையவில்லை என்றும் தகவல் கிடைத்திருப்பதாகவும் ஆக்சிஜன் சிகிச்சையே பலன் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.