Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அரசு வழங்கும் பேக்கேஜ் உணவை குடுக்கல…! தர்ணாவில் ஈடுபட்ட கொரோனா நோயாளிகள்… திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் அரசு அறிவித்த உணவு வழங்கப்படவில்லை என்று அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தர்ணாவில் ஈடுபட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு அறிவித்த கொரோனா நோயாளிகளுக்கான உணவு பட்டியலின்படி தினமும் காலை கஷாயம், மிளகுப்பால், மதிய உணவு, இரவு உணவு ஆகியவை முறைப்படி அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் திடீரென மருத்துவமனையின் நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயற்சித்துள்ளனர்.

அப்போது அங்கு சென்ற மருத்துவர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு முன்பு போல் முறையான உணவே அளிக்கப்படவில்லை என்றும் இதனால் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர்கள் வாக்குறுதி அளித்ததையடுத்து கொரோனா நோயாளிகள் மருத்துவமனை நுழைவு வாயிலை விட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |