Categories
கொரோனா மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அலட்சியத்தின் சாட்சி” அதிகாரிகள் கண் முன்…. கடையில் பக்கோடா வாங்கிய பெரியவர்….!!

கொரோனா பாதிப்புள்ள முதியவர் ஆம்புலன்ஸை நிற்க வைத்து விட்டு அதிகாரிகள் முன்னிலையில் பக்கோடா வாங்கச் சென்ற சம்பவம் அலட்சியத்தை காட்டுகிறது .

தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 800ஐ தூண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புளியங்குடியில் 40 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள சிதம்பர விநாயகர் கோவில் தெருவில் சேர்ந்த 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெரியவர் ஒருவருக்கும் இரண்டு பெண்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்களை கூட்டிச்செல்ல வந்த 108 ஆம்புலன்ஸை சாலையில் காத்திருக்க வைத்து விட்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை பைகளில் எடுத்துக் கொண்டு 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்தனர். இவர்களுடன் காவலர் ஒருவரும் வந்தார். இதில் கடைசியாக கட்டை பையை வைத்திருந்த முதியவர் ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு கொரோனா அச்சம் சிறிதும் இல்லாமல் மிட்டாய்க்கடைக்கு சென்று பக்கோடாவை கடைக்காரரிடம் இருந்து வாங்கியுள்ளார்.

பொதுமக்களும் அவருக்கு அருகே மிகவும் சாதாரணமாக நின்றுகொண்டு இருந்தனர்.  அதிகாரிகள் கண்முன் பெரியவர் இப்படி செய்தது அலட்சியத்தை சாட்சியாக கருதப்படுகின்றது. ஏனெனில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். காரணம் அவரால் மற்றவர்களுக்கு பரவிவிட கூடாது என்பதற்காக தான். பெரியவருக்கு தேவையானவற்றை அதிகாரிகள் தான் செய்திருக்க வேண்டுமே தவிர அவரை பக்கோடா வாங்க அனுமதித்தது அலட்சியத்தின் சாட்சியாக கருதப்படுகிறது.

 

Categories

Tech |