தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வழக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பில் பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது
அமெரிக்கா வாஷிங்டன் நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கடந்த மார்ச் 4ஆம் தேதி 70 வயது முதியவரான மைக்கேல் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். 62 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு இடையில் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கும் தருவாயில் இருந்தார். ஆனால் பின்னர் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் குணமடைந்து கடந்த மே 5ஆம் தேதி வீட்டிற்கு திரும்பினார்.
இவருக்கு சிகிச்சை அளித்ததற்கான பில்லை அவரிடம் கொடுத்த பொழுது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கும், அவர் அங்கு தங்கியிருந்த பொழுது கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கும் என அனைத்திற்கும் சேர்த்து இந்திய ரூபாய் மதிப்பில் 8.2 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. முதியோர் மருத்துவ காப்பீட்டின் கீழ் இருந்த மைக்கேல் தனது பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை.
ஆனால் அவர் கூறிய பொழுது “நாட்டில் சுகாதார நலம் விலை உயர்ந்த ஒன்றாக இருக்கும் போது அதனை சமூகமயமாக்கலில் சர்ச்சை தொடர்வது வரி செலுத்தும் மக்களுக்கு கட்டண சுமையை ஏற்படுத்தும். இதனால் அதிகளவிலான மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகின்றது” என கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவமனைகள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் 75 ஆயிரத்து 957 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கும் பெரிய திட்டம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.