தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 51.11% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 805 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இன்று வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த 93 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இருந்து வந்த 87 பேர், குஜராத்தில் இருந்த வந்த 3 பேருக்கும், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவருக்கும், கேரளாவில் இருந்து வந்த 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.