கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிட உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடலில் உள்ள இரத்த அணுக்களின் எதிரணுக்களை பிரித்து பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு செலுத்தி கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடும் சிகிச்சைக்கு பெயரே பிளாஸ்மா சிகிச்சை. இந்த சிகிச்சை கடந்த ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் இது பயனுள்ள சிகிச்சையாக உள்ளதா ? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பிலிருந்து குறைப்பதில் பிளாஸ்மா சிகிச்சை முறையிலும் நன்மை அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே கொரோனா பாதித்தவருக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்துவது பற்றி இன்னும் சில நாட்களில் இந்திய மருத்துவ கவுன்சில் இறுதி முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.