18 வயது மாணவனான கொரோனா நோயாளிக்கு மருந்து வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த அங்கித் குமார் என்பவர் தனது உறவினருக்கு ரெம்டெசிவர் மருந்து அவசரமாக தேவைப்பட்டுள்ளது. இதனால் வெளியில் எங்கும் கிடைக்காததால் கூகுளில் தேடியபோது வர்திகா ராய் என்பவரின் விற்பனையாளரின் தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஐந்து குப்பைகளுக்கு 32 ஆயிரத்து 400 ரூபாய் பணத்தை யுபிஐ மூலம் அனுப்பும்படி அவர் கூறியுள்ளார். இதை நம்பி யுபிஐ மூலம் அந்த பணத்தை அனுப்பியுள்ளார் .
இதையடுத்து அவரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. பின்னர் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வர்திகா ராயை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவன் என்பது தெரியவந்தது. மேலும் இதுபோன்று ஆன்லைனில் 11 பேரை ஏமாற்றி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.