கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு கட்டடங்கள் மருத்துவமனை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, பல்வேறு இடங்களில் மன அழுத்தத்திற்குள்ளாகும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடுவதும் தொடர் கதையாகிக் கொண்டே வருகிறது. இந்தநிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருக்கும் காந்தி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர்.. அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 27ஆம் தேதி அவர்கள் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளனர்..
அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சிறைக் கைதிகளான அவர்களுக்குக் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா வைரஸ் இருந்தது தெரிய வந்தது