Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கண்டறிய PCR முறையே சிறந்தது… இந்திய மருத்துவ ஆராய்ச்சி விளக்கம்..!!

கொரோனா தொற்று அறிய  துரித பரிசோதனை கருவிகளை விட PCR முறையே சிறந்தது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

துரித பரிசோதனை கருவிகள் குறித்து சில மாநில அரசுகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளதாக குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 960 ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 652 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |