Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்தை…” தலைகீழாக மாற்றிய 3 வயது சிறுமி”… அசத்தல் சாதனை..!!

மதுரை மாவட்டத்தில் 3 வயது சிறுமி பேப்பர் கப் மீது அமர்ந்து யோகாசனம் செய்து அசத்திய சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திகை பிரியா, மணிவண்ணன் தம்பதியரின் 3 வயது குழந்தையான பிரியா தேவதர்ஷினி. ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருந்து தனது உறவினரான சக்தியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் முதலில் உடற்பயிற்சி தகுதி வேண்டும் என்பதால் யோகா பயிற்சி செய்து வந்துள்ளார்.

தனது உறவினர் மூலமாக யோகாவில் பல்வேறு ஆசனங்களை கற்றுக் கொண்டுள்ளார். பயிற்சியின் போது பத்மாசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை கற்றுக் கொண்டார். யோகாவை ஆர்வமாக கற்றுக் கொண்ட சிறுமி ஹாசினி தனது திறமையை நிரூபிக்கும் வகையில் பேப்பர் கப் மீதும், துணியில் தலைகீழாக தொங்கியபடி உடலில் அகல் விளக்குகளை வைத்தும் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தியுள்ளார்.

ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக உருவாக்கிய யோகாவில் அசத்தி வரும் சிறுமி தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். மூன்று வயதிலேயே தனது திறமையில் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் அணிக்கு விளையாடி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று உறுதியோடு இருக்கிறார்.

Categories

Tech |