இந்தியாவில் 37 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 39வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன.
இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,043 லிருந்து 37,336 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,147 லிருந்து 1,218- ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 485 பேரும், குஜராத்தில் 236 பேரும், மத்திய பிரதேசத்தில் 145 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 8,889 லிருந்து 9,951 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 11,506 பேரும், குஜராத்தில் 4,721 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து டெல்லியில் 3,738 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,719 பேரும், ராஜஸ்தானில் 2,666 பேரும், தமிழகத்தில் 2,526 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,328 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதாக மத்திய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மாவட்டங்களில் என்னென்ன ஊரடங்கு தளர்வுகளை மேற்கொள்ளலாம் என்பதையும் மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.