முகக் கவசம் அணியாத 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 10,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி பொது மக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்த 52 பொதுமக்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து அபராதம் விதித்துள்ளனர்.மேலும் இவர்களிடமிருந்து ரூபாய் 10,400 அபராதமாக வசூலிக்கப்பட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.