Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படித்தான் நடந்துக்கணும்…. தீவிரமாக நடைபெற்றும் பணி… பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்…!!

திருப்பூர் மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியானது மேற்கொள்ளப்பட்டது.

உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் நகராட்சி சார்பில் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணியானது நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து தினசரி மார்க்கெட், அரசு மருத்துவமனை, ஏ.டி.எம் மையங்கள், அம்மா உணவகம், காங்கேயம் பேருந்து நிலையம், கடைவீதி போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின் வணிகர்களுக்கு பேருந்து நிலைய கடைகள் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதிகளில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |