சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து தனித்துணை கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து தனித்துணை கலெக்டர் கோவிந்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் வீடுகள்தோறும் தடுப்பூசி போடாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை 1 வாரத்துக்குள் முடிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வாழப்பாடி புதுப்பாளையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
இதனையடுத்து தொற்றல் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் எத்தனை பேர் என்கிற கணக்கெடுப்பையும் விரைவாக முடிக்குமாறு கூறியுள்ளார். மேலும் இந்த பணிகள் முடிவடைந்ததும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெறும் என்று கூறியுள்ளனர். இந்த கூட்டத்தில் மருத்துவர் மற்றும் கிராம உதவியாளர் பலர் கலந்து கொண்டுள்ளனர்.