Categories
மாநில செய்திகள்

“கொரோனா” தடுப்பு நடவடிக்கை சட்டம்… ஆளுநர் ஒப்புதல்…!!

கொரோனா விதிமுறைகளை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு காரணமாக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இது மக்களுக்காக கொடுக்கப்பட்ட சுதந்திரம் இல்லை. மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் தகுந்த நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். நடைமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு அவசர சட்டம் ஒன்றை ஏற்படுத்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்கலாம் என்ற தமிழக அரசின் இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் கொடுத்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவோர் மீது தாக்குதல் நடத்துவது குற்றம் எனவும் புதிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Categories

Tech |