சென்னையில் 8 டாக்டர்கள் உட்பட 12 மருத்துவ பணியாளர்களுக்கு இன்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 2 பேர் மற்றும் அரசு பல் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 செவிலியர்கள், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கும், சூளைமேடு, அயனாவரம், எழும்பூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு களப்பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக எண்ணற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.