கோவை அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று வரை 161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலேயும் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் அனுமதி பெறாமல், முறையான பாஸ் இல்லாமல் கோவை மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் தொடர்புடைய நபர்களுக்கும் பரிசோதனை நடத்தபபட்டுள்ளது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வந்த சுமார் 4,000 பேர் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.