Categories
செங்கல்பட்டு திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 21 பேருக்கும், நெல்லை மாவட்டத்தில் 23 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 430 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அதில் இதுவரை 67 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, நெல்லை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் தற்போது 23 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து அதிமான தொழிலாளர்கள் சொந்த மாவட்டமான நெல்லைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நேற்று மட்டும் 1,000த்திற்கும் மேற்பட்டோர் நெல்லைக்கு வந்துள்ளனர். அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், கங்கைகொண்டான்சோதனை சாவடி அருகே உள்ள எல்-காட் மையத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |