நெல்லையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 751ல் இருந்து 782 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நெல்லையில் இதுவரை 551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 193ல் இருந்து 224 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல, விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விருதுநகரில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 444 ஆக இருந்த நிலையில் இன்று 491 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை விருதுநகரில் கொரோனா பாதித்த 202 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.