Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 10 காவலர்கள் உட்பட 68 பேருக்கு கொரோனா உறுதி…மேலும் அதிகரிக்க வாய்ப்பு..!

சென்னையில், இன்று காலை முதல் 10 காவல் பணியாளர்கள் உட்பட சுமார் 68 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவரும் நுண்ணறிவு, பாதுகாப்புப் பிரிவு காவலர்கள் ஆவர். அதில் ஒருவர் பெண் காவலர் ஆவார். தற்போது ஆணையர் அலுவலகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சென்னை வேப்பேரியில் மாநகர காவல் அலுவலகம் உள்ளது. நேற்று ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் துணை ஆணையரின் கார் ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

* சென்னை அசோக் நகரில் 11 வது தெருவில் கோயம்பேடு சந்தை சார்ந்த மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று காலை புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து புதிதாக 14 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, கயம்பேடு சென்று திரும்பிய காய்கறி வியாபாரிகள் மூலம் அசோக் நகர் 11 வது தெருவில் பாதிப்பு 25 ஆக அதிகரித்துள்ளது.

* இதேபோல, சென்னை வேளச்சேரியில் ஒரே தெருவை தேர்ந்த 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டள்ளது. வேளச்சேரியில் வண்டியில் காய்கறி விற்பனை செய்யும் நபர் உட்பட 14 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இவர் கோயம்பட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்து வேளச்சேரியில் விற்பனை செய்து வந்தார்.

இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவரது மகனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் வசிக்கும் இடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தற்போது ஒரே தெருவை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அந்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

* சென்னை கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது

* சென்னை சவுகார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் அம்மா உணவக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல் தொலில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டிஜிபி அலுவலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |