சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி திருமலா தேவஸ்தானத்தில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களின் சகா ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து 31,667 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. குறிப்பாக, ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். மேலும் மாநிலத்தில் இன்று 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பினை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பாதிப்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இயலவில்லை என்பது தான் வேதனை.