கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேருக்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 23 கர்ப்பிணி பெண்கள் மற்றும் கோயம்பேடு தொடர்பில் உள்ளவர்கள் என மொத்தம் 71 பேருக்கு நோய்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
கோயம்பேட்டில் இருந்து சென்னையில் இதுவரை 76 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சந்தையில் இருந்து சென்ற வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடலூரில் சுமார் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோயம்பேட்டில் இருந்து வந்துள்ள நிலையில் 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூரில் கோயம்பேடு சென்று திரும்பிய 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 20 பேருக்கும், தஞ்சை மாவட்டத்தில் ஒருவர் என இதுவரை 371 பேருக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.