பிரிட்டனில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது 12 பகுதிகள் மீண்டும் உச்சம் அடைந்து வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த ஏழு நாட்களாக பெரும்பாலான பகுதிகள் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி புதிதாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 20,360 ஆக இருந்த நிலையில் தற்போது அது 14,815 வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் 233 பேர்கள் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.
இருப்பினும் தற்போது 12 பகுதிகளில் கொரோனா உச்சம் அடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேற்கு யார்ஷயரில் உள்ள கால்டர்டேலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் 165.5 லிருந்து195.5 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மற்றும் மிடில்ஸ்பரோ பகுதிகளில் 356.1 ஆகா இருந்த பாதிப்பு எண்ணிக்கை 382.3 ஆக உயர்ந்துள்ளது.
மிட்டேவோன் பகுதியில் 119.1-லிருந்து 142.1ஆக உயந்துள்ளது. ஆகையால் கொரோனா பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றால் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.