திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுளிபட்டியில் கொரோனா நிவாரண நிதி ரேஷன் கடையில் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள 16 கூட்டுறவு ரேஷன் கடைகளில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. அதன்படி கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிபட்டி கூட்டுறவு ரேஷன் கடையில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலரும், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினருமான விஜயன் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து கொரோனா நிவாரண நிதி 3,902 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் தவணையாக வழங்கினார்.